வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு வருகைத் தந்து தற்போது நிர்கதிக்குள்ளாகியுள்ளவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷன் தனது பேஸ்புக் தளத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று அல்லது நாளை தாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் பல மலையக இளைஞர்கள் நிர்கதிக்குள்ளாகி, வீதிகளில் தங்கியுள்ள காணொளிகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குறித்த இளைஞர்களை அனுப்பும் நடவடிக்கைகளிலும் தாமதம் ஏற்படும் சாத்தியம் எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.