இரண்டாம் இணைப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, இன்று (05) நாட்டின் பல்வேறு பகுதிகளின் முழு கடையடைப்பு (பூரண ஹர்த்தால்) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, மக்கள் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
பெரும்பாலான பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைகளுக்கு செல்லாது, தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலாம் இணைப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, நாடு தழுவிய முழு கடையடைப்பு (ஹர்த்தால்) போராட்டத்திற்கு இன்று (05) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினாலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, ஆசிரியர் சங்கங்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் உள்ளிட்ட மேலும் பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
இந்தநிலையில், நாட்டின் பல்வேறு பாகங்களில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post