இலங்கை : கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாவலபிட்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று (15) முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை மூடுவதற்கு நாவலபிட்டி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
நாவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கீழ், நடத்தப்பட்ட பரிசோதனைகளின் இன்றைய தினத்தில் மாத்திரம் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நாவலபிட்டி நகரில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் நகரத்தை 3 தினங்களுக்கு மூட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது,
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் பலர், நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வருகைத் தந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதையடுத்து, சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பெற்று, வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ தெரிவிக்கின்றார்.
இதேவேளை, நாவலபிட்டி நகருக்குள் வருகைத் தருவோரின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நாவலபிட்டி நிர்வாகத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
நாவலபிட்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கிருமி ஒழிப்பு மேற்கொண்டதன் பின்னர், 18ம் திகதிக்கு பிறகு, வர்த்தக நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது (TrueCeylon)
Discussion about this post