இலங்கை : 8 மாடிகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்பொன்று மிகுந்த அபாய நிலைமையில் காணப்படுகின்றமை தொடர்பிலான செய்தியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
நுவரெலியா – ராகல – உடபுஸ்ஸெல்லாவ பகுதியிலுள்ள 8 மாடிகளை கொண்ட கட்டடமொன்றே இவ்வாறு அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என வலபனை பிரதேச சபை தெரிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post