மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் வலபானை பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
குறித்த மூன்று மாவட்டங்களுக்கும் முதலாம் நிலை அபாய எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)