புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலிருந்து கண்டி வைத்தியசாலைக்கு ஒருவர் இன்று மாற்றப்பட்டுள்ளார்.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கொழும்பு பகுதியில் பணிபுரிந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.
கொழும்பில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் கண்டி பகுதிக்கு அவர் பயணித்துள்ளதுடன், அதற்கு முன்னர் ஹட்டன் நகரின் பல பகுதிகளுக்கும் அவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டிக்கோயா பெருந்தோட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவர் தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அம்பியூலன்ஸ் மூலம் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.