இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் கோதாவரி மாவட்டத்திலுள்ள ஏலூரு பகுதியில் அடையாளம் காணப்பட்டாத ஒரு வகை நோய் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நோயினால் இன்று மாலை வரை 428 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 200ற்கும் அதிகமானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நோய் பாதிப்புக்கள் மற்றும் அதன் தன்மை குறித்து தகவல்களை திரட்டி வருவதாக ஏலூரு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
அத்துடன், மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை, 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த நோய் குறித்து ஆராய்வதற்காக விசேட வைத்திய குழுவொன்று, ஏலூரு மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை முதல் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 345 பேர் மர்ம நோய் தாக்கம் காரணமாக வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)