வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் (30) இன்றைய தினத்தில் இதுவரையான நேரம் வரை 320 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திற்கு 1,700 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் , வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் துறையினர் , நோயாளர் காவு வண்டி சாரதிகள் என 300 நபர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.
முதலாவது தடுப்பூசியினை வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் ஏற்றியதுடன் இரண்டாவதாக தொற்று நோயியல் நிபுணர் லவன் அவர்களும் மூன்றாவதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் அவர்களும் நான்காவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் த.காண்டிபன் அவர்களும் ஏற்றிதை தொடர்ந்து ஏனைய மருத்துவதுறை சார்ந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது.(Trueceylon)
Discussion about this post