ஆர்ஜன்ரீனாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பே, மரடோனாவின் உயிரிழப்புக்கான காரணம் என வைத்தியர்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூளையில் இரத்த கசிவு காரணமாக சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மரடோனா இன்று தனது 60ஆவது வயதில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
1986ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக, ஆர்ஜன்ரீனாவை கால்பந்தாட்ட விளையாட்டின் உச்சத்திற்கு மரடோனா கொண்டு சென்றார்.