கேகாலை – பின்னவல பகுதியிலுள்ள அழகிய இயற்கை தோற்றத்தை கொண்ட ஒரு மிருகக்காட்சிசாலை குறித்து ஆராய்வதற்காக எமது குழு அந்த பகுதிக்கு சென்றிருந்தது.
மிருகக்காட்சிசாலையென்றால், அனைவருக்கும் நினைவிற்கு வருவது தெஹிவளை மாத்திரமே.
எனினும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை விடவும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள மிருகக்காட்சிசாலையே பின்னவல மிருகக்காட்சிசாலை.
கேகாலை நகரிலுள்ள சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் இந்த மிருகக்காட்சிசாலை அமையப் பெற்றுள்ளது.
மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிக்கும் போதே, மனதை கவரும் வகையிலான அழகிய தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தாண்டி உட்பிரவேசிக்கும் போது, மனதிற்கு அமைதியை கொடுக்கும் வகையிலான அழகிய பூங்காவுக்கு மத்தியில் இந்த மிருகக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மிருகக்காட்சிசாலை தொடர்பான வீடியோவை இன்று நாம் வெளியிடுகின்றோம்.