மதுபானம் தயாரிக்கும் நடைமுறையை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நபர்களுக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து, மதுபானங்களை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என கூறி சிலர் சமூக வலைத்தளங்களில் மதுபான தயாரிப்பு நடைமுறைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே பொலிஸார் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.