அனுராதபுர பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட போலியான 100 அமெரிக்க டொலர்கள் மோசடி சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர்.
பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 36 வயதான சந்தேகநபர், மலேஷியாவில் இருந்து குறித்த இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
100 டொலர் பெறுமதியான 327 போலியான அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார், மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.(Trueceylon)