பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேயங்கொட பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றிற்காக சந்தேகநபரை அழைத்து சென்ற வேளையில் ஏற்பட்ட சம்பவமொன்றை அடுத்து, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
குறித்த சந்தேகநபர் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
37 வயதான நிஷாந்த குமாரசிறி என்ற நபரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது சந்தேகநபரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டிபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். (TrueCeylon)