பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையத்தளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிபடையைச் சேர்ந்த 264 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தமாக 1277 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பூராகவும் உள்ள 85 பொலிஸ் நிலையங்களில், கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கொவிட் கொத்தணி விபரம்
பொலிஸ் நிலையம் | எண்ணிக்கை |
கோட்டை | 162 |
பொரள்ளை | 107 |
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு | 68 |
வாழைத்தோட்டம் | 76 |
கிரான்பாஸ் | 39 |
மருதானை | 23 |
புறக்கோட்டை | 20 |
குற்றப் புலனாய்வு திணைக்களம் | 15 |
சுற்றாடல் பொலிஸ் பிரிவு | 12 |
பேராதனை | 08 |
கறுவாத்தோட்டம் | 31 |
பொலிஸ் கொவிட் கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களில் 925 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 352 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.(TrueCeylon)