நடந்து முடிவடைந்த புலமை பரிசில் பரீட்சையில் 135 மாணவர்கள் எந்தவொரு புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, பரீட்சை வினா பத்திரத்தின் முதலாம் பாகத்தில் 60 மாணவர்களும், இரண்டாம் பாகத்தில் 75 மாணவர்களும் பூஜ்ஜியம் புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பரீட்சை வினா பத்திரத்தின் முதலாவது பாகத்தில் 1 முதல் 10 வரையான புள்ளிகளை 210 மாணவர்களும், இரண்டாம் பாகத்தில் 1 முதல் 10 வரையான புள்ளிகளை 1807 மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், பரீட்சை வினா பத்திரத்தின் முதலாவது பாகத்தில் 91 முதல் 100 வரையான புள்ளிகளை 6010 மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, இரண்டாம் பாகத்தில் 42649 பேர் 91 முதல் 100 வரையான புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
முதலாம் பாகத்தில் பூஜ்ஜயம் புள்ளிகளை பெற்ற 50 மாணவர்கள், குறைந்த வருமானத்த பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று, இரண்டாம் பாகத்தில் பூஜ்ஜியம் புள்ளிகளை பெற்ற 69 மாணவர்களும், குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இந்த முறை புலமை பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 20 ஆயிரத்து 264 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.