புரவி சூறாவளியிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கும், சேதங்களை குறைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புரவி சூறாவளியினால், பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற பகுதிகளிலுள்ள இராணுவ கட்டளை தளபதிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)