புரவி சூறாவளி இன்றைய தினம் நாட்டை கடக்கவுள்ள நிலையில், வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புரவி சூறாவளி இன்றிரவு 7 மணியளவில் கிழக்கு மாகாணத்தின் ஊடாக நாட்டை கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 250 கிலோமீற்றர் தூரத்தில் புரவி சூறாவளி தற்போது நிலைக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)