புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள பின்னணியில், தற்போது புத்தளம் கல்வி வலயத்திற்காக பாடசாலைகளும் மூடப்படுகின்றன.
புரவி சூறாவளி நாட்டை அண்மித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)