புரவி சூறாவளி காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த சூறாவளி தாக்கம் காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாக நிலையம் குறிப்பிடுகின்றது
அத்துடன், 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 192 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த சூறாவளி தற்போது இலங்கையை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. (TrueCeylon)