உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் கொவிட் வைரஸின் புதிய வீரியம் கொண்ட வைரஸ்கள் பல அடையாளம் காணப்பட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்தியாவில் மாத்திரம் 240 விதமான புதிய வீரியம் கொண்ட வைரஸ் வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இந்தியாவில் அடையாளம் காணப்படும் புதிய வீரியம் கொண்ட வைரஸ்களில், அதிகளவானவை மகாராஷ்ரா மாநிலத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்ரா மாநிலத்திற்கு அடுத்ததாக, கேரளா, மத்திய பிரதேஷ், சந்திஸ்கார் மற்றும் பஞ்ஜாப் ஆகிய மாநிலங்களில் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Discussion about this post