புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றிய தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனக்கு உறுதிப்படுத்த முடியாத விதத்தில் இந்த வீரியம் கொண்ட வைரஸ் தாக்கிய ஒரு நபர் தொடர்பிலான தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வு கூடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை சுகாதார அமைச்சுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவம் பாரிய பிரச்சினை கிடையாது என கூறிள அவர், வைரஸ் தொற்றுக்குள்ளானவர் கடும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News Sources :- Mawbima.lk
Discussion about this post