பிரித்தானிய மில்டன் கென்ஸ் கவுன்ஸில் தேர்தலில், ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலின் மகளான ஷஷ்னா முஸம்மில் போட்டியிடவுள்ளார்.
இலங்கையில் பிறந்த ஷஷ்னா முஸம்மில், எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலிலேயே போட்டியிடவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் கன்ஷவேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் மில்டன் கென்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் அவர், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
ஷஷ்னா முஸம்மில் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர், கொழும்பு மாநகர சபை மேயரின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதெபோன்று, இலங்கையிலுள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அவர் கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மேல்நிலை கல்வியை தொடர்வதற்காகவும், பிரித்தானியாவில் குடியேறும் நோக்குடனும் சென்ற அவர், அங்குள்ள பல்கலைக்கழங்களில் கல்வி பயின்று, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த பின்னணியிலேயே, தேர்தலிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post