இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ரெபிட் அன்டீஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு ரெபிட் அன்டீஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக இங்கிலாந்து அணி இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 14 மற்றும் 22ம் திகதிகளில் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது (TrueCeylon)
Discussion about this post