கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் 9 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகளை செய்த இரண்டு இலங்கை வைத்தியர்களும் இவர்களில் அடங்குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்திலேயே குறித்த வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்கள்.
01.ஹென்றி ஜயவர்தன (லண்டன் நகரில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளார்)
02.லகி விஜேரத்ன (61 வயது – லண்டனில் வசித்து வந்துள்ளார்.)
03.சிதம்பரம் பிள்ளை குக பிரசாத் (75 வயது – வருமான வரி அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்)
04.லொக்கு லியன வடுகே சுதத் திலக்சிறி (கிழக்கு லண்டனில் வசித்து வந்துள்ளார். பாணந்துரை சுமங்கல வித்தியாலயத்தின் பழைய மாணவன்)
05.அநுர கால்லகே (62 வயது – வடக்கு லண்டனில் வசித்து வந்துள்ளார்)
06.லலித் சூல பெரேரா (72 வயது – லண்டனில் வசித்து வந்துள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவன்)
07.டொக்டர் என்டன் செபஸ்டியன் பிள்ளே (75 வயது – கிங்ஸ்டன் வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியர்)
08.டொக்டர் சிவனந்தன் (76 வயது – ஓய்வூபெற்ற வைத்தியர்)
09.இங்கிலாந்தின் வடக்கு பகுதியிலுள்ள முதியோர் இல்லத்திலுள்ள 80 வயதான நபரொருவரும் உயிரிழந்துள்ளார்.
இவர்களை தவிர, பிரித்தானியாவில் மேலும் பல இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, சுவிஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 14 இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த சிங்கள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் :- ADA
வெளிவிவகார அமைச்சின் பதில்
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் பிரகாரம், சுவிஸர்லாந்தில் கொவிட் 19க்கு இலக்காகி உயிரிழந்த ஒருவரின் உயிரிப்பு தொடர்பிலேயே தமக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் உயர் அதிகாரியொருவர் ட்ரூ சிலோனுக்கு உறுதிப்படுத்தினார்.
ஏனைய நாடுகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தமக்கு பதிவாகியுள்ள போதிலும், அது கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இடம்பெற்ற உயிரிழப்பு என அந்தந்த நாடுகள் தமக்கு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.