பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொவிட் – 19 வைரஸின் வீரியம் அதிகரித்த வைரஸ் பிரிவு, இலங்கையில் பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
இந்த வைரஸிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு மக்கள் வசமே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரயம் கூடிய வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது பரவி வரும் வீரியம் அதிகரித்த வைரஸானது, விமானம் நிலையம் அல்லது துறைமுகத்தின் ஊடாகவே பரவும் சாத்தியம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
இந்த வைரஸிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். (TrueCeylon)