பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இந்த இருவரும் கடந்த 22ம் திகதி நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பிரித்தானியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸின் வீரியம் கொண்ட வைரஸ் இனமா இவர்களை தொற்றியுள்ளது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
இந்த ஆய்வுகளை நடத்துவதற்கு சிறிது காலம் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த இரு தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 5 மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். (TrueCeylon)