பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு வருகைத் தரும் அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது.
நாளைய தினம் (22) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த காலக் கட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் விமானங்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்தியா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக அயர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் பிரித்தானியாவிற்கான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)