மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MMC) தலைவராக குமார் சங்கக்கார இன்று பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, இன்று முதல் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு இந்த கழகத்தின் தலைவராக பதவி வகிக்கவுள்ளார்.
பிரித்தானியர் அல்லாத ஒருவர், மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மெரில்போன்; கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் தலைவரினால் கடந்த ஆண்டு மே மாதம் குமார் சங்கக்காரவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மெரில்போன் கிரிக்கெட் கழகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக குமார் சங்கக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.