தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் வீடியோவை TIK TOK சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், பின்னரான காலத்தில் ஹட்டன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த இளைஞன் சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்தல் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.(TrueCeylon)
Discussion about this post