இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் இதன்போது தமது நன்றியை பகிர்ந்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post