இலங்கை : பாராளுமன்றத்தில் கடமையாற்றும் ஐவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
இந்த ஐவர் குறித்து, உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உணவு பிரிவிலுள்ள ஒருவருக்கும், போக்குவரத்து பிரிவிலுள்ள ஒருவருக்கும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகத்தில் ஒருவருக்கும், பொலிஸார் இருவருக்குமாக ஐவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கடமையாற்றும் 463 பேருக்கு கடந்த 13ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த அறிக்கையின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், பாராளுமன்ற ஊழியர்கள் ஐவருக்கு மாத்திரமே கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாராளுமன்றத்திலுள்ள 16 பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட 478 பேருக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post