கொவிட் 19 தொற்று சிறைச்சாலைகளில் பரவிவருகின்ற நிலையில், சிறைச்சாலைகளிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை, பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான செயலணி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் சிறைச்சாலைகளிலிருந்தே பாராளுமன்ற அமர்வுகளுக்கு பிரசன்னமாகின்றனர்.
இந்த நிலையில், குறித்த மூவரையும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம், சுகாதார வழிமுறைகளின் கீழ் அவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.