இலங்கையின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களை பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிக்கின்றார்.
அதன் ஒருகட்டமாக இலங்கையின் பாரம்பரிய மருத்துவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.(TrueCeylon)