சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, உரிய நடைமுறையை பின்பற்றி தன்னால் தயாரிக்கப்பட்ட பாணியை அருந்தியிருக்கும் பட்சத்தில், அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்காது என கேகாலை ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டார தெரிவிக்கின்றார்.
தன்மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உரிய நடைமுறைகளுக்கு அமைய தன்னால் தயாரிக்கப்பட்ட கொவிட் நிவாரண பாணியை அருந்தினால், நிச்சயமாக கொவிட் தொற்று ஏற்படாது என்பதை தான் உறுதியாக கூறுவதாகவும் அவர் கூறுகின்றார்.
தன்னால் தயாரிக்கப்பட்ட பாணியை, சுகாதார அமைச்சர் ஒரு முறை சரியாக அருந்திய போதிலும், அதற்கு பின்னர் அதனை அவர் சரியாக பின்பற்றினாரா என்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் தம்மிக்க பண்டார தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post