பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகள் பாடசாலை வேளையில், பாடசாலைக்கு வெளியில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து பஸ்களை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்கு, போக்குவரத்து பயண அனுமதி சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த போக்குவரத்து பயண அனுமதி சீட்டை பெற்று கொடுப்பது தொடர்பில், போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அம்பலாங்கொடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post