உயர்தர மாணவர்களுக்கு TAB உபகரணத்தை வழங்க கடந்த ஆட்சி நல்லாட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு TAB உபகரணங்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, முதற்கட்டமாக தரம் 6 முதல் 11ம் தரம் வரையான மாணவர்களுக்கு 96000 TAB உபகரணங்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த TAB உபகரணங்கள் 1401 பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
குறித்த TAB உபணரணங்களை மாணவர்களுக்கு தமது வீடுகளுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாது என்பதுடன், அதிபரின் கண்காணிப்பில் பாதுகாப்பாக பாடசாலையில் மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இந்த TAB உபகரணத்தில் இணைய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படாது எனவும், மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்டங்கள் மாத்திரம் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் எனவும தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post