கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவியொருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது .
நாவலபிட்டி சேர்ந்த உயர் தர மாணவியே தொற்றுக்குள்ளானதாக நாவலபிட்டி பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
குறித்த மாணவியின் தந்தை பொது சந்தையோடு தொடர்புடையவர் என்றும் அவருக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது குடும்பதிலுள்ளவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே மூத்த மகளான உயர்தர மாணவிக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவி பேராதனை பெனிதெனிய சுயதனிமை நிலையத்திற்கு 10/12/2020 மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கதிரேசன் கல்லூரி ஆசிரியர்கள் நால்வர், மாணவர்கள் 09 பேர் , குறித்த மாணவியின் தம்பி , தங்கை மற்றும் குடியிருப்பை அண்மித்தவர்கள் 10 பேர் வரை தத்தமது வீடுகளிலே 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்