தலவாகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பாடசாலைக்கு வருகைத் தந்த பெற்றோர் மாணவர்களை இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாகவே பெற்றோர், மாணவர்களை அழைத்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும், பாடசாலைக்கு வருகைத் தந்துள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு வெளியான தகவலை அடுத்து, மாணவர்களின் பெற்றோர் பாடசாலையை நோக்கி படையெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நேற்று(23) ஆரம்பிக்கப்பட்டன.