மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளை உரிய திட்டத்திற்கு அமைய ஜனவரி மாதம் 11ம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வரும் சில தினங்களில் பாடசாலைகள் தொடர்பிலான உரிய திட்டத்தை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, ஆரம்ப நிலை பாடசாலைகளின் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து, கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் திட்டமொன்றை தயாரித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். (TrueCeylon)