பாகிஸ்தான் கராச்சி பகுதியில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வடைந்துள்ளது.
ரயிலில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிபத்தை அடுத்து, ஓடும் ரயிலிலிருந்து பலர் பாய்ந்துள்ளமையினாலேயே உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 30ற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயிலில் காணப்பட்ட இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களே வெடித்துள்ளன.
நீண்டதூரம் பயணிக்கும் பயணிகள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வருகின்றமை பாரியதொரு பிரச்சினை என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் தெரிவித்துள்ளார்.