முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைத் தருவது அத்தியாவசியமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திற்கு வருகைத்தரும் திகதியை பஷில் ராஜபக்ஷ இன்னும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்திற்கு வருகைத் தருவதற்காக தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அவர் வசமே காணப்படுவதாகவும், அவர் தீர்மானத்தை எட்டும் தினத்தில் தானும் ஒரு தீர்மானத்தை எட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கட்சியை போன்று, அரசாங்கமும் முன்னோக்கி பயணிக்க பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
