அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம – சாலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று மாலை 6.05 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு திசையை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எரிப்பொருள் பவுசர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்ததுடன், எதிர்திசையில் பயணித்த பவுசருடன் மோதியிருந்தது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் கொஸ்கம பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பவுசர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post