மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் வரை, பழைய மாகாண சபையை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான யோசனையொன்றை அரசாங்கத்திற்கு முன்மொழிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார். (TrueCeylon)