பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
புதிய மாணவர்கள், இணைய வழியின் ஊடாக தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்காக (2019/2020) 41 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்காக இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.