இலங்கை : பலாங்கொடை நகர் எல்லைக்குள் அமைந்துள்ள 5 பள்ளிவாசல்களை மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (07) இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
பலாங்கொடை நகரிலுள்ள 2 முஸ்லிம் இனத்தவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, சுகாதார பிரிவினர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
ஒன்றரை வயதான குழந்தையொன்றும், 62 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் நெருங்கி பழகிய 15 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் வரை, பலாங்கொடை நகர் எல்லைக்குள் உள்ள 5 பள்ளிவாசல்களை மூடுவதற்கு பலாங்கொடை கொரோனா தடுப்பு குழு தீர்மானித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post