இலங்கை : பலாங்கொடை பகுதியிலுள்ள 13 பள்ளிவாசல்களை மூடுவதற்கு பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி நுர்தீன் ரிஃப்டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பலாங்கொடை பகுதியிலுள்ள பெண்ணொருவருக்கும், குழந்தையொன்றுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பலாங்கொடை பகுதியிலுள்ள 5 பள்ளிவாசல்கள் நேற்றைய தினம் மூடப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 8 பள்ளிவாசல்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடையிலுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேருக்கு தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பலாங்கொடை நகரில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் அனைத்து அறிக்கைகளும் கிடைக்கும் வரை, பள்ளிவாசல்களை திறக்காதிருப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (LankaDeepa)
Discussion about this post