இணைய ஊடகவியலாளர் முருகபிள்ளை கோகிலதாஸன் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த முருகபிள்ளை கோகிலதாஸன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 37 வயதான குறித்த ஊடகவியலாளர், கடந்த 29ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தனது பிரத்தியேக பேஸ்புக் தளத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் முருகபிள்ளை கோகிலதாஸன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முருகபிள்ளை கோகிலதாஸன் கைது செய்யப்பட்டமைக்கு, ஊடக அமைப்புக்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன. (TrueCeylon)
News Sources :- Anidda