இலங்கை தமிழ் பத்திரிகை வரலாற்றில் முதல் முறையாக, பத்திரிகையின் ஊடாக வீடியோ பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தை தமிழன் பத்திரிகை இன்று (11) முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள தமிழன் பத்திரிகை செய்திகளை, பத்திரிகை ஊடாக வாசிக்கும் அதேவேளை, தேவை ஏற்படின் உடனடியாக அதே செய்தியை வீடியோ வழியாகவும் பார்வையிட முடியும் என பத்திரிகை நிறுவனம் ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தது.
பத்திரிகை செய்திக்கு கீழே காணப்படும் QR குறியீட்டை, தமது கையடக்கத் தொலைபேசிகளில் ஸ்கேன் செய்வதன் ஊடாக, அந்த செய்தியை வீடியோ வழியாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வாசகர்களுக்கு தமிழன் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
காணொளி (வீடியோ) வழியாக எவ்வாறு பார்வையிடுவது
01.முதலில் கையடக்கத் தொலைபேசிக்கு QR செயலி (APP) ஒன்றை PLAY STORE ஊடாக தரவிறக்கம் செய்ய வேண்டும்.
02.தரவிறக்கம் செய்த QR செயலியிலுள்ள கமரா தொழில்நுட்பத்தின் மூலம், பத்திரிகையின் செய்திக்கு கீழுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
03.ஸ்கேன் செய்தவுடன், நீங்கள் ஸ்கேன் செய்த செய்தியை காணொளியாக (வீடியோ) பார்வையிட முடியும்.
https://youtu.be/C7e3s-5KIZg
Discussion about this post