கொழும்பு புறநகர் பகுதியான பத்தரமுல்ல பகுதியிலுள்ள கட்டமொன்றில் பாரிய தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நான்கு மாடிகளை கொண்ட கட்டடமொன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
தளபாட காட்சியறையொன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டத்தின் மேல் மாடியொன்றில், இன்றிரவு 9.15 அளவில் இந்த தீ பரவியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post