பதுளை − மடூல்சீமை பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய நிலைமை காணப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.
மடூல்சீமை − எகிரிய பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்தே, பணியகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் 1.5 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்தது.
இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் இருவேறு சந்தர்ப்பங்களில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
இந்த நிலஅதிர்வு குறித்து புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அதிகாரிகள் பிரதேசத்திற்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக, குறித்த பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்தே, மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயமும், மண்மேடுகள் சரிவதற்கான அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post